தைவான் நாட்டின் தைச்சுங் நகரில் உள்ள மாலில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் பாகங்கள் சாலையில் சிதறிய அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மாலில் 12ஆவது மாடியில் உள்ள உணவகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் டேஸ்கேமில் பதிவாகிய வெடி விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.