நாட்டிலேயே தமிழக பெண்கள் தான் அனைத்து நிலைகளிலும் முதலிடத்தில் உள்ளனர்.ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பதை காணும் போது பெருமையாக உள்ளது.நாட்டில் உயர்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் டாப்.கல்வியை பொறுத்த வரை பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர்.100 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ரீதியாக பாலின ரீதியாக கல்விக்கு தடை இருந்தது.கல்வி கனவை அனைவருக்கும் திறந்து விட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.இந்தியாவிலேயே அனைவருக்கும் கல்வி என சட்டம் இயற்றியது நீதிக்கட்சி.காமராஜர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் திறக்கப்பட்டன.கலைஞர் கருணாநிதி கல்லூரி கல்வியில் அதிக கவனம் செலுத்தினார்.