பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பயன்படுத்திய சொகுசு காருக்கு 38 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய ரோல்ஸ் ராயல்ஸ் காரை 2021 ஆம் ஆண்டு வாங்கிய பெங்களுரை சேர்ந்த தொழிலதிபர் கேஜிஎஃப் பாபு, அதற்கு சாலை வரி கட்டாமல் ஓட்டியதுடன், அவரது பெயரில் மாற்றம் செய்யப்படாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.