இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், அமெரிக்க தொழிலதிபருமான பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக, தொழில்நுட்பம், புதுமை, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளதாக, மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.