பயங்கரவாத அபாயங்கள் மற்றும் உள்நாட்டு ஆயுத மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில், இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.