15 நிமிடங்களில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை இந்த மாதம் தொடங்க இருப்பதாக பிரபல இ -காமர்ஸ் நிறுவனமான அமேசான் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிவிரைவு டெலிவரியில் சொமாட்டோ, செப்டோ, ஸ்விக்கி உள்ளிட்டவை கொடி கட்டிப் பறக்கும் நிலையில் புதிய போட்டியாளராக அமேசானும் நுழைகிறது.