விஜய் நடித்து வரும் 'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் ஜன நாயகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரூபாய் 400 கோடி செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ஓ.டி,டி, உரிமத்தை அமேசான் பிரைம் 121 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.