ஆண்டுதோறும் 2 புள்ளி 1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில், நடப்பு ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள், சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.