பிரேசிலின் பிரேக்கிங் விழாவில் உலகெங்கிலும் உள்ள பிரேக் நடனக் கலைஞர்கள் நடனமாடி பிரமிக்க வைத்தனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இந்த சர்வதேச பிரேக்கிங் விழாவின் நிறைவு விழாவில், ஆண்கள், பெண்கள் என 32 பேர் பங்கேற்றனர். அப்போது டிஜே இசை குழுவினரால் இசைக்கப்பட்ட ஹிப்-ஹாப் பாடல்களுக்கு ஏற்ப அவர்கள் உடலை வளைத்து, நெளித்து நடனமாடி கூட்டத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.