Also Watch
Read this
எஸ்.பி.வேலுமணி தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்திற்கு சென்றடைந்த நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன.
அதிமுகவில் திடீர் பிளவு
தேர்தலில் தோல்வியை தழுவ முழுமுதற் காரணம் இபிஎஸ்தான் என முறைத்துக் கொண்டு, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க, அவர்களை கட்சி பதவியில் இருந்தே தூக்கி தனது பவரை காட்டினார் இபிஎஸ். இதனிடையே, கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து உள்ள பதவியும் கைவிட்டுப் போய்விடுமோ? என்ற பயத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரும் ஆற்காடு தொகுதி எம்எல்ஏவுமான சுகுமார், பண்ருட்டி எம்எல்ஏ மோகன், அந்தியூர் எம்எல்ஏ ஹரி பாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன், காங்கேயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜன் ஆகிய 4 பேர் இபிஎஸ்ஸை சந்தித்து பழையபடியே அவரது கூட்டுக்குள் இணைந்து கொண்டனர்.

எம்எல்ஏக்கள் ராஜினாமா
இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், பிளவு பட்ட இரு அணிகளும் சேருவது தொடர்பாக, பேச்சுவார்த்தை தீவிரமடைந்தது.
இரு அணிகளும் இணைந்தது
இந்த நிலையில், இபிஎஸ் தரப்பிடம் ஆதரவு கடிதம் கொடுத்த எஸ்.பி.வேலுமணி தரப்பு அணி, இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்தது. இதனால், சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் தற்போது முடிவுக்கு வந்தது.

தலைமை செயலகத்தில் அதிமுகவினர்
இதனை தொடர்ந்து, இபிஎஸ் இல்லத்தில் இருந்து அவசர அவசரமாக தலைமை செயலகம் சென்ற அதிமுகவினர், இரு தரப்பும் அளித்த மனுக்களை வாபஸ் பெற்றனர்.
சட்டமன்ற குழு தலைவர், கொறடா தொடர்பாக அளித்த மனுக்களும், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த மனுக்களும் வாபஸ் பெறப்பட்டன. சட்டமன்ற குழு தலைவர், கொறடா தொடர்பாக அளித்த மனுக்களை சபாநாயகரிடம் இருந்து வாபஸ் பெற்றனர். கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த மனுக்களும் வாபஸ் பெற்றநிலையில், கொறடா உத்தரவை மீறியதற்காக மன்னிப்பு கடிதமும் அளிக்கப்பட்டது.

சாமர்த்தியமாக சாதித்துக் காட்டிய இபிஎஸ்...
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிரிந்த நிலையில், தற்போது இரு அணிகளையும் இணைத்து சாமர்த்தியமாக சாதித்துக் காட்டினார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.

42 ஆக உயர்வு
இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது. தலைமைச் செயலகத்தில் பெயர்களை வாசித்து எம்.எல்.ஏ.க்களின் வருகையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி செய்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved