சென்னையில், அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு வங்கிக்காக ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு வரும் ஓநாய்களிடம் இருந்து, சிறுபான்மை மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றதோடு, தீய சக்திகளிடம் ஏமாந்து போய் விட்டால் விடியல் என்பதே இருக்காது என்றும் கூறினார். அதோடு, எத்தனை நெருக்கடி வந்தாலும் கொள்கையில் உறுதியாக இருப்போம் என்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுடனான கூட்டணி என்பது தேர்தலுக்கான ஒப்பந்தம் மட்டுமே என்றும், கொள்கைகள் தான் எங்கள் உயிர் மூச்சு என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.