நெல் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்தும் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து, உழவர்களுடன் இணைந்து போராட்டங்கள் நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்க துணை நிற்காமல், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி எங்கே போனார் எனக் கேள்வி.உழவர்களுக்காக போராடுவோருக்கு துணைநிற்காமல் யாருடைய அனுமதிக்காக காத்திருக்கிறார் இபிஎஸ் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.சுய மரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும் தான் கூட்டணி என்று நினைக்கிறாரா? என்றும் காட்டம்.முதல்வர் வெளியிட்ட பதிவு;டெல்டாஉழவர்களின் கண்ணீர் துடைக்க துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைதுரோகிகள் எங்கே?சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை? எனக்கேட்ட இபிஎஸ் எங்கே?பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும்சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று இபிஎஸ் நினைக்கிறாரா?உழவர்கள் நலன் காக்க தமிழ்நாடு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் கேட்கிறேன்...