தோனி, கோலி, ரோகித், டிராவிட் ஆகியோர் என் மகனின் 10 வருட கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக்கி விட்டதாக சஞ்சு சாம்சன் தந்தை விஷ்வநாத் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்த அவரது பேட்டியில் முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி உள்ளிட்டோரின் அவசரமான தீர்மானங்களால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் வழங்காமல் அவருடைய வளர்ச்சியைத் தடுத்ததாகக் குற்றம்சாட்டினர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக கூறியவர் அவர்கள் அணியில் சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் வழங்காததால் சஞ்சு இன்னும் உறுதியுடன் ஒரு நல்ல வீரராக விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்றார். மேலும் முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந் பேச்சுக்கு பதிலடி கொடுத்த சஞ்சுவின் தந்தை எந்த அணியுடன் அடித்தாலும் சதம் சதம் தான், அதை மதிக்க வேண்டும் என பேசியுள்ளார்.