விஜய் நடித்ததில் ஆல்டைம் ஃபேவரைட் படங்களில் ஒன்றான சச்சின் திரைப்படம் அடுத்த மாதம் 18ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம், தற்போது வரை காதலர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இப்படத்திற்காக தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன. இந்நிலையில், படம் வெளியாகி 20ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.