சேலத்தில் சாலையோரம் வாயில் நுரை தள்ளிய படி, மது போதையில் மாணவி மீட்ட அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியில் குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. ஆசை வார்த்தை பேசி சிறுமியிடம் பழகி வந்த இரும்புக் கடை வியாபாரி, சிறுமியை பலவந்தப்படுத்த முயன்று போலீஸில் சிக்கியது குறித்து விவரிக்கிறது.சேலம் அழகாபுரத்தில் 16 வயது சிறுமி ஒருவர் சாலையோரம், மயங்கிய நிலையில் நுரை தள்ளியபடி கிடந்தார். மதுபானம் கலந்த குளிர்பான பாட்டிலுடன் சிறுமி கிடந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த அந்த 11-ஆம் வகுப்பு மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நபர் ஒருவர் பைக்கில் மாணவியை அழைத்துவந்து சாலையோரம் விட்டுச் சென்றது தெரிய வர, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ராமன்குட்டைபகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை கைது செய்தனர். கைதான கோவிந்தசாமி பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வரும் நிலையில், சிறுமி வார விடுமுறையின் போது குடும்ப வறுமையை சமாளிக்க பக்கத்து இரும்புக் கடைக்கு வேலைக்கு சென்று வந்திருக்கிறார். வேலைக்கு சென்ற சிறுமியை அடிக்கடி நோட்டமிடும் கோவிந்தசாமி, ஆசையை தூண்டும் வகையில் பேச, பருவத்தில் வில்லங்கம் அறியாமல் சிறுமியும் சலனப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவிந்தசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையிலும், சிறுமியை தனது காம ஆசைக்கு பயன்படுத்த நினைத்ததாக கூறப்படுகிறது. இரு நாட்களுக்கு முன்பு சிறுமியை தனியாக காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற கோவிந்தசாமி, குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கேறி சிறுமி தன்னிலை மறந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுமிக்கு திடீரென வலிப்பு வந்த நிலையில், பயந்து போன கோவிந்தசாமி, பைக்கில் ஏற்றி வந்து சாலையோரம் இறக்கி விட்டுவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.இதனையடுத்து, கோவிந்தசாமி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.