குடும்பத்துடன் ஸ்பெயினில் முகாமிட்டுள்ள நடிகை ஷாலினி அஜித்குமார், தனது மகள் அனோஷ்காவுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புக்காக அஜித்குமார் ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். அங்கு மகன் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷாலினி ஒவ்வொன்றாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். அந்தவரிசையில் தற்போது மகளுடன் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோவை ஷாலினி பகிர்ந்துள்ளார்.