'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்தின் இளமை தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்றை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.