அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தவிர்க்கமுடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போவதாக, திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.