நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ”ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்” ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளது. “ஐலேண்ட் ரம்பிள்” என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது. இதன் மூலம் ரம்பிள் தீவு பயணத்தின் த்ரில்லோடு அந்தமான் தீவுகளின் கண்கொள்ளா அழகையும் ரைடர்களுக்குக் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours கொடுத்தது.