அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள ‘குட் பேட் அக்லி‘ திரைப்படத்தின் முன்பதிவு வரும் 4-ம் தேதி இரவு 8:02 மணிக்கு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 18 நிமிடங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.