நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'திருப்பதி' திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2006-ம் ஆண்டு திருப்பதி படம் வெளியானது. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய இத்திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.