நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலம் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு, கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசிர்வாதம் வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் கோயில் அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர்.