பனிப்புயல் காரணமாக பிரிட்டனில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்புயல் ஏற்படுத்திய தாக்கத்தால், பிரிட்டனின் பெரும்பாலான நகரங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான நிலையத்தின் ஓடு பாதைகளையும் பனி மூடியதால், விமானங்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.