தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 300க்கும் அதிகமான விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.