தனது Maps செயலியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் நிகழ்கால காற்றின் சராசரி தரக்குறியீட்டை காட்டும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. காற்றின் தரக்குறியீடு மட்டுமின்றி, காற்றின் மாசால் ஏற்படும் தாக்கம் குறித்த குறிப்புகளையும் வெளியிடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை காற்றின் தரக்குறியீடு பதிவிடப்படும். இந்தியாவில் எந்த இடத்தின் தரக்குறியீட்டையும் இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.பூஜ்யம் முதல் 50 வரை காற்றின் தரம் நன்றாக உள்ளது எனவும் 401 முதல் 500 வரை சுவாசிக்க தகுதியற்றது எனவும் காற்றின் தரம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.