மோசமான ஏர்லைன்ஸ் என்பதற்கான ஆஸ்கர் விருதை ஏர் இந்தியாவுக்கு கொடுக்கலாம் என, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் ((Jaiveer Shergill)) கடுமையாக விமர்சித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது தமக்கு ஓட்டை உடைசல் இருக்கை ஒதுக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தாம் பயணித்த விமானங்களில் ஏர் இந்தியா மிகவும் தரம் குறைந்தது எனவும், வாடிக்கையாளர் சேவை மற்றும் விமானங்களின் தரத்தில் இது மோசமானதிலும் மோசமானது என்ற சாதனையை படைத்துள்ளதாகவும், எக்ஸ் தளத்தில் ஜெய்வீர் ஷெர்கில் பதிவிட்டுள்ளார். ஏர் இந்தியாவில் உடைந்த இருக்கை வழங்கப்பட்டதுடன் விமான பணியாளர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.