பண்டிகை கால சீசன் உச்சத்தில் இருக்கும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்க நகரங்களுக்கான சுமார் 60 விமான சேவைகளை ரத்து செய்திருப்பது, சிவில் விமானப் போக்குவரத்து துறையில் பேசுபொருளாக மாறியுள்ளது.பல விமானங்கள் பராமரிப்பு பணி முடிந்து திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.