ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பயணிகள் ஏறியதும், இறுதிக்கட்ட ஆய்வு செய்தபோது, தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டறிந்ததை தொடர்ந்து, விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.