போர் விமானங்களை தயாரித்து வழங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதாக விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் கூறியுள்ள நிலையில், இந்த மாத இறுதியிலேயே தேஜாஸ் எம்கே-1ஏ விமானத்தை விமானப்படைக்கு வழங்குவதாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் இந்த நிறுவனத்திற்கு இரண்டு உற்பத்தி ஆலைகள் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள மூன்றாவது ஆலையில் தேஜாஸ் உற்பத்தி நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள GE Aerospace நிறுவனத்திடம் இருந்து F404 எஞ்சின்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தேஜாஸ் உற்பத்தி தடைபட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 தேஜாஸ் எம்கே-1ஏ போர்விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்தம் போட்டுள்ளது.