இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசம் நடைபெறவுள்ள நிலையில், இதனை காண வரும் பொதுமக்களுக்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமான இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பூங்கா மற்றும் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகள் இயக்க உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.