திருப்பதி ஏழுமலையானை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் தோமாலை சேவையில் வழிபாடு செய்தார். இதற்காக திங்கள்கிழமை மதியம் திருமலைக்கு சென்றவர் மாலை வராக சாமியை தரிசனம் செய்தபின், மனம் உருக தியானம் செய்தார். அதனை தொடர்ந்து அதிகாலை கோவிலுக்கு சென்று தோமாலை சேவையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் ஏழுமலையான தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.