சீனாவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோ மக்களை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு சீனாவில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அன்று நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான வீடியோவில், ஏஐ ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்க முன்னேறி செல்வதை பார்க்க முடிகிறது. உடனடியாக பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட்டு,எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுத்தனர்.