AI தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார். காமிகேஸ் வெடிமருந்துகள் உள்ளிட்ட ட்ரோன்களை உருவாக்க வட கொரியா வலுவான முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த ஒரு வருடமாக வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.