இந்தியாவில், SJ-100 சிவில் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில், இந்துஸ்தான் ஏரோ-நாட்டிக்ஸ் நிறுவனமும், ரஷ்யாவின் United Aircraft Corporation நிறுவனமும் கையெழுத்திட்டன. மாஸ்கோவில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரட்டை இயந்திரங்கள் உள்ள குறுகலான வடிவமைப்புடன் உள்நாட்டு போக்குவரத்துக்கான சிறு விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது. உடான் திட்டத்தில், சிறு நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை விரிவாக்கும் திட்டத்திற்கு, இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஹிந்துஸ்தான் ஏரோ-நாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த AVRO HS-748 விமான உற்பத்தி, 1988ல் நிறுத்தப்பட்ட பிறகு, பல ஆண்டுகளுக்கு பிறகு, ரஷ்ய ஒத்துழைப்புடன் புதிய விமான உற்பத்தி துவங்குகிறது. SJ-100 விமானங்களை உலகளாவிய அளவில், 16 விமான நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன.