சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் சென்னையில் கடந்த 2022ம் ஆண்டில் உற்பத்தியை நிறுத்தியது. இந்த நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நிறுவன அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். ஃபோர்டு நிறுவனத்துடனான 30 ஆண்டு கால உறவை புதுப்பிப்பது குறித்து அந்நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.