விருது விழாவில் பட்ட அவமானம்பிக் பாஸ்-9ம் சீசனில் டைட்டில் வின்னர் ஆக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இறுதியில் சபரி மற்றும் திவ்யா மட்டும் இருந்தபோது திவ்யாவின் கையை தூக்கி, விஜய் சேதுபதி அவரை டைட்டில் வின்னர் ஆக அறிவித்தார். அவரிடம் டைட்டில் டிராபியை விஜய் சேதுபதி கொடுத்தபிறகு அவர் எமோஷ்னலாக பேச தொடங்கிவிட்டார். "என்னோட முதல் ட்ராபி இது. நிறைய சேனலில் வேலை செய்திருக்கிறேன். நிறைய கேரக்டரில் நடித்து இருக்கிறேன். எல்லா விருது விழாவுக்கும் போவேன். இந்த வருஷம் விருது கிடைக்கும், அடுத்து வருஷம் கிடைக்கும் என காத்திருப்பேன்.என்னை நாமினேட் செய்வார்கள், ஆனால், விருது கொடுக்க மாட்டார்கள். பிக் பாஸ் வாய்ப்பு வந்தபோது எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் போக வேண்டாம் என்று தான் சொன்னார்கள். ஆனால், இது பெரிய வாய்ப்பு, ஒரு முறை தான் கிடைக்கும். அது கிடைக்கும்போதே பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். ட்ராபியை எதிர்பார்த்து நான் வரவில்லை. எனக்கான ஒரு இடம் இதில் இருந்து வெளியில் வரும்போது கிடைக்கவேண்டும் என விரும்பினேன். பிக் பாஸ் வீட்டில் நான் நானாக இருந்ததால் கிடைத்த இந்த வெற்றியை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என திவ்யா கணேஷ் கண்கலங்கி பேசினார். 8 நாட்களில் பராசக்தி படம் செய்துள்ள வசூல்இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் பராசக்தி. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான பராசக்தி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் வசூலும் சற்று சரிவை சந்தித்தது. இந்நிலையில், 8 நாட்களை கடந்திருக்கும் பராசக்தி படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, 8 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ.81+ கோடி வசூல் செய்துள்ளது.அஜித் உடன் ரேஸ் காரில் பயணிக்கலாம்நடிகர் அஜித், தற்போது கார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக பல கோடி ரூபாய் செலவாகும் நிலையில், அஜித் பிரபல ஜூஸ் நிறுவனத்தை விளம்பரப்படுத்த தொடங்கி இருக்கிறார். அஜித்தின் கார், டிசர்ட் உள்ளிட்டவற்றில் அந்த நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேலும் அந்த கூல்டிரிங்க்ஸ் நிறுவன விளம்பரத்திலும் அஜித் போட்டோ இடம்பெற தொடங்கி இருக்கிறது. தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் இருக்கும் அஜித், இப்படி விளம்பரத்தில் நடிக்க தொடங்கி இருப்பதை நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது அஜித் துபாயில் இருக்கும் நிலையில், அவரது Ferrari 488 Challenge ரேஸ் காரில் உடன் பயணிக்க வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் 3500 திர்ஹாம் செலுத்தி இதற்கான டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு நபருக்கு 86 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை ருக்மணி வசந்தின் காதலர் இவர் தானா?கன்னடத்தில் வெளிவந்த ’சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ருக்மணி வசந்த். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்தார். அடுத்ததாக, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ருக்மணி வசந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. திரையுலக நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கை குறித்து அவ்வப்போது சில தகவல்கள் இணையத்தில் வைரலாகும். அது உண்மையா இல்லை, வெறும் வதந்தியா என்பதைப்பற்றி பின் தெரியவரும். இந்த நிலையில், நடிகை ருக்மணி வசந்த் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த நபர்தான் ருக்மணியின் காதலர் என பலரும் இணையத்தில் கூறி வருகிறார்கள். ஆனால், அவர் ருக்மணியின் காதலர் அல்ல, நண்பர் என தற்போது தெரிய வந்துள்ளது. இதை பற்றி ருக்மணி வசந்த் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவும் கூறியிருப்பார். ஆனாலும், அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள், அவர் ருக்மணி காதலர் அல்ல, நண்பர் மட்டும்தான்.திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் + பெரிய பரிசுபிக் பாஸ்-9ம் சீசன் பைனலில் மொத்தம் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்று திவ்யா கணேஷ் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்த அவர் தற்போது டைட்டில் ஜெயித்து இருக்கிறார். டைட்டில் ஜெயித்த திவ்யா கணேஷுக்கு பரிசுத்தொகை 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசும் தரப்பட்டு இருக்கிறது. ஷோவின் ஸ்பான்சர் ஆக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் லேட்டஸ்ட் victoris காரை திவ்யாவுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறது. அதன் விலை 25 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.Anirudh பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா?நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33ஆவது படமான 'தி பாரடைஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கில மொழிகளில் அடுத்தாண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தி பாரடைஸ் படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம்பெற உள்ளதாகவும், அதில் நடனமாட நடிகை தமன்னாவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி நடந்தால் அந்த பாடல் படு viral ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது , காரணம் ஏற்கனவே அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ பாடலுக்கு தமன்னா நடனமாடி அந்த பாடல் எவ்வ்வளவு பெரிய ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரியும். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “என்னைத் தொட முயன்றார், நான் அறைந்தேன்”திரைப்படத் துறையில் தற்போது பிரபல நடிகைகளாக வலம் வரும் பலர், தொடக்கத்தில் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். சிலர் வாய்ப்புகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக இருந்தாலும், சிலர், இந்தப் பிரச்சினைகள் குறித்து தைரியமாகப் பேசுகிறார்கள். இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே, தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்தியா படத்தில் பணிபுரிந்த போது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி தனது கேரவனில் நுழைந்ததாக அவர் கூறினார். எல்லை மீறி தன்னைத் தொட முயன்றதாகவும், உடனடியாக அவரை அறைந்ததாகவும் பூஜா ஹெக்டே தெரிவித்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் மீண்டும் தன்னுடன் பணிபுரியவில்லை எனவும் தெரிவித்தார். பூஜாவின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.இதையும் பாருங்கள் - புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை