24 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்பட்ட கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான கிளாடியேட்டர், உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி 5 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்பட்ட கிளாடியேட்டர் இரண்டாம் பாகம் உருவாகி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக இந்தியாவுக்கு ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட், நடிகர் பால் மெஸ்கல் வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.