ஆப்கானிஸ்தானின் தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் என தாலிபன் அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.ஆப்கனில் அமைந்துள்ள தாலிபன் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதாலும், ஆப்கானியர்களுக்கு விசா வழங்கினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதாலும், ஆப்கானியர்களுக்கு இந்தியா விசா வழங்காமல் உள்ளது.