விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய தணிக்கை வாரியம் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தரப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. தணிக்கை சான்று - சிக்கிய ஜனநாயகன் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சான்று விவகாரம் - மேல்முறையீடுஇந்த வழக்கு, இன்று ஜனவரி 20ஆம் தேதி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மண்டல சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள்? படத்தை பார்த்து சட்டப்படி ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தணிக்கை வாரியம் தரப்பில் கூறியதாவது: படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. தணிக்கை வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள அதிகாரிகளுக்கே அதிகாரம். 14 காட்சிகளை நீக்கிய பின்னர் படத்தைப் பார்த்து முடிவெடுக்கப்படும் என கூறினோம். 14 காட்சிகளை நீக்கிவிட்டதால் தணிக்கைச் சான்று வழங்க கோரினர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.தயாரிப்பு நிறுவன தரப்பின் வாதம்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், படத்திற்கு எதிராக கொடுத்த புகார் குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை. படம் மறு ஆய்வுக்கு அனுப்புவதாக மட்டுமே தகவல் வந்தது. ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்ததால், அவசர வழக்காக முறையிடப்பட்டது. விதிகளை ஆய்வு செய்து, தனி நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. தணிக்கை வாரியத்தின் உத்தரவு இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. படத்தை பார்வையிட்ட குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க பரிந்துரைத்தனர். படத்தை பார்த்த பிறகு தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்க வேண்டும். படத்தை பார்த்து வீட்டுக்கு சென்றுவிட்டு 4 நாட்கள் கழித்து புகார் அளிக்க முடியாது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் 2 நாளில் வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அன்றைய தினமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை. தணிக்கை வாரியம், வழக்கு தாக்கல் செய்திருக்காவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டு இருக்கும். மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் - தீர்ப்பு எப்போது?இதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி, "தணிக்கை வாரியத்துக்கு போதுமான அவகாசம் அளித்து இருக்க வேண்டும். படத்திற்கு எதிராக புகார் யாரிடம் இருந்து கிடைத்தது?" என கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம், ”மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவரிடம் இருந்து கிடைத்தது" என்று கூறியது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், "ஒரே நாளில் நீதிமன்ற நடைமுறைகளை முடித்து உத்தரவு தர வேண்டும் என்பதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இதையும் பாருங்கள் - நடிகர் அஜித் உடன் ரேஸ் காரில் பயணிக்கலாம்