15 வருட காதலனை கரம்பிடித்த கீர்த்தி சுரேஷ்தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியா நடிச்சிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியிலும் கால் பதிச்சிருக்காங்க. தமிழில் விஜய், சமாந்தா நடிப்புல வெளியாகி செம ஹிட் அடிச்ச தெறி படத்தோட இந்தி ரீமெக்குல தான் இப்போ கீர்த்தி நடிச்சிருக்காங்க.இப்படி சினிமா வாழ்க்கையில் பிஸியா நடிச்சிட்டு வர கீர்த்தி, தன்னோட 15 வருட காதலரான தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை காதலச்சிட்டு வர்றதாகவும், கூடிய சீக்கிரம் திருமண செஞ்சுக்க போறதாகவும் சமீபத்துல தகவல் வெளியாச்சு.இந்த நிலையில், கோவாவுல இன்னைக்கு கீர்த்தி சுரேஷ், அந்தோனி தட்டில் திருமணம் கோலாகலமா நடந்து முடிஞ்சிருக்கு..இவங்களோட கல்யாணத்துல திரையுலகு நெருங்கிய நண்பர்களும் கலந்துக்கிட்டு இருக்காங்க..திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிரவே, கீர்த்திக்கு ரசிகர்கள் எல்லாரும் வாழ்த்து தெரிவிச்சிட்டு வர்றாங்க...விவாகரத்தை அறிவித்த இயக்குநர் தனுஷ்- ஐஸ்வர்யா, ஜெயம் ரவி - ஆர்த்தி, ஜிவி பிரகாஷ் - சைந்தவி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு எனத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்து வந்துட்ருக்கு. இவர்களைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி தன்னோட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதா சீனுராமசாமி அறிவிச்சிருக்காரு. மனிதத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளை தருவதில் வல்லவரான சீனு ராமசாமி கூடல் நகர் படத்தின் மூலம் அறிமுகமானாரு. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று படம் முலமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவரு, நீர்ப்பறவை , தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள கொடுத்தாரு. இந்த நிலையில , விவாகரத்து முடிவை அறிவிச்சிருக்கும் சீனு ராமசாமி, நானும், என் மனைவி தர்ஷானாவும் எங்களோட 17 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருப்பது திரையுலகில் மட்டுமல்லாம ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கு. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 74வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமா தெரிவிச்சிட்டு வர்றாங்க.இந்த நிலையில , நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், எக்ஸ் தளத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்ருக்காரு. அதில் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, நீங்கள் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் பதிவிட்ருக்காரு.ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் கொடுத்த விடாமுயற்சி படக்குழு இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்துல நடிகர் அஜித் குமார் நடிப்பில உருவாகியிருக்க படம் தான் விடாமுயற்சி. அனிருத் இசையமைச்சிருக்க, இந்த படத்த லைகா நிறுவனம் தயாரிச்சிருக்கு. அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்துல நடிக்க ஆக்ஷன் கதைகளமா உருவாகியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள்ல வெளியாக இருக்க நிலையில, படத்தோட டீசர், அஜித்குமாரின் டப்பிங் போட்டோஸ்ன்னு தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்ப பெற்றிருக்கு..இந்த நிலையில தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்துல எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.இந்த புகைப்படத்துல அஜித் மாஸான தோற்றத்தில் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரிலீஸ் தேதி வெளியீடு...நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்த படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, வுண்டர்பார் நிறுவனம் (Wunderbar films) இப்படத்தை தயாரிச்சிருக்கு இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில ஹீரோவாக தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நடிச்சிருக்காரு. மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்க. கோல்டன் ஸ்பாரோ மற்றும் காதல் பெயில் ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் திரையில் வெளியாக இருப்பதாக தனுஷ் அவரது இன்ஸ்டா பக்கத்தில அறிவிச்சிருக்காரு.இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பார்.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தில் இணைந்த FAFA இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது தங்கலான் திரைப்படம்.இந்த நிலையில அடுத்ததா பா.ரஞ்சித் ’வேட்டுவம்’ என்கிற புதிய படத்தை எழுதி இயக்க இருக்காரு. இந்த படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கு. மேலும் படத்துல அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில நடிக்க கமிட்டாகியிருக்காங்க.ஏற்கனவே இப்படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் உலக புகழ் பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில தற்போது படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்துல இணைய இருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுது.தனுஷ் செய்தது அநியாயம்நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. அதில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தின் சில படப்பிடிப்புக் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா தரப்பு தனுஷ் தரப்பிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனா , அதற்கு படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என கூறப்பட்டுச்சு. இதனால, கோபமடைந்த நயன்தாரா தன் மீதுள்ள தனிப்பட்ட வன்மத்தின் காரணமாகவே தனுஷ் அனுமதி மறுத்தார் என கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்ருந்தாங்க. அந்த வீடியோவுக்கு ப்ரோமோஷனாக தான் இந்த சர்ச்சையை கிளப்பினார் நயன்தாரா என நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்திருந்த நிலையில சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா இந்த சர்ச்சையை பத்தி பேசியிருக்காங்க. அதில "சரின்னு எனக்கு தோன்றும் விஷயத்தை செய்ய நான் ஏன் பயப்படனும். நான் தவறு செய்தால் தான் பயப்படனும். நடிகர் தனுஷிடம் பேசுவதற்காக, அவரது மேனேஜர், நண்பர்கள் மூலமாக பல முறை அணுகியதாகவும், ஆனா முடியவில்லை , இந்த விஷயத்தில தனுஷ் செய்தது அநியாயம் என கூறியிருக்காங்க.திருமணமாகியும் குறையாத கிளாமர்.. ரசிகர்களை ஈர்க்கும் ரகுல் ப்ரீத் சிங்... நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பின்னரும் தெலுங்கு, இந்தின்னு சினிமாவில் செம பிஷியா நடிச்சிட்டு வந்துட்ருக்காங்க. இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியில் கலக்கிட்டு வர்றாங்க. இந்த நிலையில் சமீபத்தில் கிளாமர் போட்டோஷூட் செய்த ரகுல் ப்ரீத் சிங், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்துல வெளியிட வைரலாகி இருக்கு.