நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டு பேரும் உணவு அருந்தும்படி இருந்த புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா "மதிய உணவுக்கு அமர்ந்தோம் என்றும், சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு எழுந்தோம்" எனவும் பதிவிட்டுள்ளார்.