நடிகை சமந்தா தயாரிப்பில் முதல் படம் வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரலாலா மூவிங் ஃபிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2023இல் சமந்தா தொடங்கினார். தற்போது இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் படமாக ‘சுபம்’ என்ற திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் தினமும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவை, த்ரில்லர் கலந்த பாணியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை வசந்த் மரிகாந்தி எழுத, பிரவீன் கேண்ட்ரெகுலா இயக்கியுள்ளார். இதில் ஹர்ஷித் மல்கிரெட்டி, கண்ஷ்ரியா கோந்தம், ஷாலினி கொண்டேபுடி, ஷ்ராவனி நடித்துள்ளார்கள்.