திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதிலும் மகிழ்ச்சி இருக்கிறது என நடிகை சமந்தா தெரிவித்தார். தனது வாழ்க்கையில் திருமண பந்தத்தை கடந்து வந்து விட்டதாகவும், பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பை சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளதாகவும் கூறியவர், பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னம்பிக்கையோடும், மன உறுதியோடும் வாழ முடியும் என்றார்.