தெலுங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தொரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தாம் கலந்து கொண்டதாகவும், அப்போது மேடை சரிந்து விழுந்ததில் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது நலமுடன் உள்ளதாகவும், ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இச்சம்பவம் குறித்து கேட்டறிந்து அன்பை பகிர்ந்து கொண்ட நலம் விரும்பிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.