பாலி நாட்டுக்கு ஓய்வை கழிக்க சென்றுள்ள நடிகை பிரியா ஆனந்த் அங்குள்ள உயிரியல் பூங்காவில் பறவைகளுடன் கொஞ்சி விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பிரியா ஆனந்த், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தாராளமான கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வரும் பிரியா ஆனந்த், பாலி நாட்டில் விடுமுறை மோடில் உள்ளார்.