இந்தி நடிகையும், மாடலும், நடிகர் அர்ஜுன் கபூரின் காதலியுமான மலாய்க்கா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று நண்பகல் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆனால் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அனில் அரோராவின் தற்கொலை குறித்த தகவல் கிடைத்ததும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன்னர் போலீசார் குவிக்கப்பட்டனர். மெர்ச்சண்ட் நேவியில் பணியாற்றி வந்த அனில் அரோரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடக்கிறது.