நடிகர் விஜயின் ‘சச்சின்’ பட ரீ ரிலீஸ் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான விஜயின் சச்சின் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், வரும் 18ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை கலைப்புலி தாணு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.