தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்கு கட்டப்படவுள்ள குடியிருப்புகளுக்காக, நடிகர் விஜய் சேதுபதி 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். முதற்கட்டமாக 500 சதுர அடியில் 1000 வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும், அதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் கட்ட முடியாத தொழிலாளர்களுக்காக திரை பிரபலங்களை அணுகிய போது, விஜய் சேதுபதி அந்த தொகையை கொடுத்து உதவியதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.