ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்திற்கு கருப்பு என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளையொட்டி, படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடொக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்... குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த அஸ்வின்