நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் நேர்மை அவரை இன்னும் உயரமான இடத்திற்கு நோக்கி கொண்டு செல்லும் என நடிகர் சூரி பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஐஸ்வர்யா லட்சுமி மாமன் படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்ததாகவும், அவர் டாக்டர் என்பதால் திரையில் மருத்துவர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருப்பதாவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தைப் புரமோசன் செய்ய முழு முயற்சியுடன் ஈடுபட்டதற்கும் அவருக்கு நன்றி என கூறியுள்ளார்.